Friday, October 31, 2008

சிறுகதை - ஆளில்லாத தீவினிலே..... இறுதிப்பகுதி!

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

வீடியோ கான்பரன்ஸில் இந்தியாவில் இருக்கும் அனைத்து மேலதிகாரிகளுக்கும் முன் அமர்ந்து இருந்தேன். என் அருகில் கேப்டன் சான்சஸ் இருந்தார். சான்சஸின் முகம் வியர்வையில் குளித்து இருந்தாலும், அவருக்குள் இருக்கும் பதற்றத்தை அவரால் தவிர்க்க இயலாதது தெரிந்தது. அதிகாரிகள் கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருந்தனர்.

“தமிழ்! நீங்க சொல்வது உண்மையாயா?”

“கண்டிப்பாக... அந்த பெண்ணைப் பார்த்ததும், அவளை துப்பாக்கி முனையில் நிறுத்தினேன். அவளுக்கு துப்பாக்கியைப் பற்றி தெரியவில்லை. துப்பாக்கியைக் கண்டு கொள்ளாமலே இருந்தாள். அவளை மிரட்டும் தொனியில் பேசியதும் பயந்து போனாள். அவளது மொழியும் எங்களது தமிழ் மொழியும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தது. அதனால் அவள் என்னுடன் பேசத் தொடங்கினாள்”

“நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தையே அதிகமாக்குகிறது தமிழ்! மேல சொல்லுங்க”

“யார் அவள் என்று விசாரித்ததில் அவள் அந்த தீவிலேயே அவர்களது குழுவுடன் வசிப்பதாகக் கூறினாள். அவர்களின் வீடுகள் மலைகளைக் குடைந்து படைக்கப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து யாரும் வெளியே வரக் கூடாது எனவும் கூறினாள். மேலும் மலைக்குள் சூரிய ஒளி வரும் அமைப்பு உள்ளதாகவும், தண்ணீர் அருவிகளும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகில் இருப்பதாகவும் கூறினாள்.”

“உணவுப் பொருட்களை விளைவிக்கும் பள்ளத்தாக்குகளுக்கு மட்டும் இரகசிய வழி வழியாக சென்று திரும்புவது வழக்கமாம். அந்த பெண்ணுக்கு மல்லிகைப் பூவின் மீது உள்ள ஆசையின் காரணமாக அவர்களது வீட்டை விட்டு அவளுக்கு மட்டுமே தெரிந்த பாறை இடுக்கு வழியே வெளியே வந்திருக்கிறாள்”

“தமிழ்! நீங்கள் சொல்வதை எல்லாம் நம்பவே முடியவில்லை. ஏதோ பழைய காலங்களில் சொல்லப்படும் கதை போல் உள்ளது”

“இல்லை கேப்டன்! நான் சொல்வதெல்லாம் உண்மை தான்.. அவள் சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அவளுடன் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றேன். பாறைக்குப் பின் இருந்த ஒரு சிறு வழியாக என்னை அழைத்துச் சென்றாள். என்ன ஆச்சர்யம். ஒரு அழகான சிறு கிராமம் போல் இருந்தது. வீடுகள் அனைத்தும் அழகான மரங்களால் ஆன கதவுகளாலும் செய்யப்பட்டிருக்கிறது. நான் அந்த வீடுகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவள் ஓடிப் போய் விட்டாள். நான் அதிகப்படியான அதிர்ச்சியில் தட்டுத்தடுமாறி ஹெலிகாப்டரை அடைந்தேன்.”

“நீங்க சொல்வது உண்மை என்றாலும் கடந்த நான்கு நாட்களாக உங்களின் வழிகாட்டுதலில் அந்த தீவையே சல்லடை போட்டு தேடியாகி விட்டது. அல்ட்ரா சோனிக் முறையிலும் தேடி விட்டோம். நீங்கள் குறிப்பிடுவது போல் யாருமே அங்கு இல்லை. நீங்கள் சென்ற பாறை வழிப்பாதையையும் உங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இனியும் நீங்கள் சொல்லும் கதைகளை நம்ப இயலாது தமிழ்!”

“இது கதை இல்லை சார், இன்னும் சில நாட்கள் நம் சோதனையை தள்ளி வைத்து தேடலாம். நான் சென்ற நேரம் இருட்டி இருந்ததால் என்னால் அந்த பாதையைக் கண்டுபிடிக்க இயலவில்லை.”

“மன்னிக்கவும் தமிழ்! நமது இந்த ஆராய்ச்சியின் முடிவுக்காக உலகமே நம்மை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கின்றது. உங்களுடைய இந்த பேத்தல்களுக்காக எல்லாம் நம் சோதனையை தள்ளி வைக்க இயலாது. உங்களை இந்த சோதனை முடியும் வரை தீவுக்கு செல்ல தடை விதிக்கின்றோம். ஆனாலும் கப்பலில் இருந்து ஆராய்ச்சி பணிக்கு உதவுங்கள். Best of Luck!"

தற்கு அடுத்த வந்த சில நாட்கள் என் வாழ்வில் மறக்க இயலாதவை. இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு அந்த தீவையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனோ தூங்க முயற்சி செய்தால் அந்த அப்பாவிப் பெண்ணின் முகமே நினைவுக்கு வந்தது.

இன்று ஆய்வின் கடைசி நாள். மதியம் 1 மணிக்கு உலையை வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வெடித்தும் இருந்தது. பாதுகாப்பிற்காக கப்பல் தீவில் இருந்து பல நாட்டிக்கல் தூரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. சில மணிகளில் இந்தியாவில் இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களின் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து, எந்த கதிர்வீச்சும் இல்லை என அறிவிக்கப்பட்டது. எனவே தீவை நோக்கி மேல் தகவல்களுக்காக கப்பல் சென்று கொண்டிருக்கின்றது. தீவு இருந்த இடமே தெரியாமல் இருந்தது.

கப்பல் முன்னேறிக் கொண்டு இருந்தது. கப்பலின் முகப்பில் நின்று கொண்டு இருந்தேன். என் அருகில் சான்சஸூல் எதையோ பறிகொடுத்தவர் போல் தீவு இருந்த இடத்தை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். கடலில் ஏதோ மிதந்து வருவது போல் இருந்தது. அருகே வர வர அது என்னவென்று புரிந்தது...

“அது.. அதே தான்.. இது அந்த பெண் வைத்திருந்த பூக்கூடை”
எனது கத்தலில் அனைவரும் கப்பலின் முகப்பிற்கு வந்திருந்தனர். பூக்கடையை வீரர்கள் கப்பலுக்கு எடுத்து இருந்தனர். கப்பல் நகர நகர மரக்கதவுகளும், மரச் சாமான்களும் மிதந்து வந்து கொண்டு இருந்தன. இன்னும் தீவை நெருங்கும் போது மரங்களில் சிக்கிய வண்ணம் பிணங்கள் தெரிய ஆரம்பித்து இருந்தது. ஆதிவாசிகள் மாதிரியான ஆடைகளுடன்...

29 comments:

Thamiz Priyan said...

இந்த சிறுகதை ஒரு நாவலாக என் சின்ன வயதில் படித்தது. அதன் ஒன்லைன் ஸ்டோரியை மட்டும் வைத்து கதையை விவரித்து விட்டேன். கதைக் கருவிற்கு உரிமையாளருக்கு இதன் உரிமை செல்கின்றது.

Iyappan Krishnan said...

நல்ல கதை. கல்கியின் சில கதைகளை நினைவுப் படுத்திட்டீங்க பொடிப்பசங்கண்ணே!..

அதென்னய்யா கொடுமை புனைவுன்னாலே எல்லாரையும் சாகடிச்சிடுறீங்க... இதை மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்

Unknown said...

அச்சோ பாவம் அண்ணா... :(((

கபீஷ் said...

நான் கதை படிக்கலை இன்னும், இது அட்டெண்டென்ஸ்

Unknown said...

கதை நல்லா இருந்தது.. பட் அந்த பொண்ணு இறந்தது கொஞ்சம் ம்ஹும் நிறைய கஷ்டமா இருக்கு..:(( இது கதைதாங்கறது கொஞ்சம் ஆறுதலா இருக்கு...:)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அண்ணே அசத்தல் அண்ணே.

நல்லாயிருக்கு.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அண்ணே சில சந்தேகம், கோவப்படாம இருக்கனும் சரியா?

1.சோகமான முடிவ வைச்சிதான் கதை எழுதுவிங்களா? வேற நல்ல சுகமான முடிவ வைக்கலாமுல்ல?

2. அப்ப கண்டிப்பா ஆள் இருந்த தீவுதான் அது. பின்ன ஏன் தலைப்பு- ஆளில்லாத தீவினிலே?

3. அடுத்து ஒரு நல்ல சுகமான முடிவுள்ள கதை எப்ப எழுதிவீங்க?

4. இவ்வளவு நல்ல கதைக்கு ஏன் கதை மாதிரின்னு லேபில்?

சயந்தன் said...

இந்தியா
பரிசோதனைக்களமான தீவு
அப்பாவி மக்கள்
மக்கள் பற்றிய கவலையற்ற கப்டன்

உருவகம்... ?

gulf-tamilan said...

//கதைக் கருவிற்கு உரிமையாளருக்கு இதன் உரிமை செல்கின்றது.//
யார்ப்பா அது???

வால்பையன் said...

ஆராய்சியாளர்கள் எதேதோ பண்ணி தேடினதா சொன்னாங்களே அப்பொ ஏன் இவங்க தெரியல

வால்பையன் said...

அவர்கள் அமானுஷ்ய மனிதர்களா

வால்பையன் said...

உங்களுக்கு மட்டும் முதல்ல தெரிஞ்சதக்கு காரணம்
நீங்களும் அவங்க க்ரூப்பு தானா

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

கடைசியா என்ன ஆங்கில படம் பார்திங்க

Thamiz Priyan said...

இந்த கதையின் மூலம் கல்கி அவர்கள் எழுதிய மயில்விழிமான் என்ற குறுநாவல்.
Credit goes to Kalki Krishnamoorthy. தகவலுக்கு நன்றி ஜீவ்ஸ்!

இதன் மூலத்தைப் படிக்க இங்கு செல்லவும்.

ஆயில்யன் said...

அச்சோ பாவம் தம்பி.. :(((

ஆயில்யன் said...

நல்ல கதை. கல்கியின் சில கதைகளை நினைவுப் படுத்திட்டீங்க பொடிப்பசங்கண்ணே!..

அதென்னய்யா கொடுமை புனைவுன்னாலே எல்லாரையும் சாகடிச்சிடுறீங்க... இதை மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்

ஆயில்யன் said...

கதை நல்லா இருந்தது.. பட் அந்த பொண்ணு இறந்தது கொஞ்சம் ம்ஹும் நிறைய கஷ்டமா இருக்கு:((

இது கதைதாங்கறது கொஞ்சம் ஆறுதலா இருக்கு...:)

ஆயில்யன் said...

தம்பி அசத்தல் தம்பி

நல்லாயிருக்கு.

தமிழ் அமுதன் said...

என்ன தமிழ் பிரியன்! கதைதான்னு
அவசரப்பட்டு சொல்லிட்டிங்க !
நீங்க எழுதினது போலவே ஒரு
பின்னுட்டம் ரெடி பண்ணி வைச்சி
இருந்தேன்.

சரி விடுங்க!

தோழி said...

கதை நன்றாக இருந்தது. ஆனால் கல்கி எழுதியது பொய் மான் கரடு என்று ஞாபகம். அதில்தான் கப்பல், வழிதவறிபோன கதைநாயகன், அங்கே அவன் சந்திக்கும் ஒரு இளம் ஜோடி என போகும் என நினைவு.

சந்தனமுல்லை said...

முழுவதும் படித்து விட்டேன்..ஏன் இவ்ளோ சோகம் கதையில்!! ஆனா நல்ல ப்ளோ இருந்தது..கதையில்!!

வெண்பூ said...

நல்ல கதை தமிழ்.. அழகான நடை.. ஆனா சோகமா முடிச்சிடீங்க.. :(

நிஜமா நல்லவன் said...

நல்ல கதை. கல்கியின் சில கதைகளை நினைவுப் படுத்திட்டீங்க பொடிப்பசங்கண்ணே!..

அதென்னய்யா கொடுமை புனைவுன்னாலே எல்லாரையும் சாகடிச்சிடுறீங்க... இதை மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்

நிஜமா நல்லவன் said...

கதை நல்லா இருந்தது.. பட் அந்த பொண்ணு இறந்தது கொஞ்சம் ம்ஹும் நிறைய கஷ்டமா இருக்கு..:(( இது கதைதாங்கறது கொஞ்சம் ஆறுதலா இருக்கு...:)

cheena (சீனா) said...

தமிழ் பிரியன் - நல்ல நடை - கதை எழுதும் திறமை பளிச்சிடுகிறது. நடக்கப் போகும் சம்பவங்களை முன் கூட்டியே அறியும் திறன் ப்படைத்த இளைஞனைப் பற்றிய கதை. சோக முடிவல்ல - எதிர்பார்த்த முடிவு தான் - தொடக்கத்திலேயே கண்ட கனவு தான் - அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் இன்னும் உள்ளன

நல்வாழ்த்துகள் - அடுத்த கதை எப்போ

Thamira said...

இப்போதான் ப‌டிச்சு முடிச்சேன். ந‌ன்றாக‌ இருந்த‌து. சீனா சொல்வ‌தைப்போல எதிர்பார்த்த‌ முடிவுதான். இந்த‌க்க‌தையில் முடிவை மாற்றுவ‌து க‌டின‌மே. இன்னும் இடைப்ப‌ட்ட‌ சில‌ ப‌த்திக‌ளை செதுக்கியிருக்க‌லாம்.

தமிழன்-கறுப்பி... said...

அப்பாவிப்பொண்ணை சாகடிச்சிடடிங்களே அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே நீங்கள் இன்னும் எழுதலாம்.

ராமலக்ஷ்மி said...

கதையின் நடை வழக்கம் போலவே மிக நன்று. மனதைக் கனக்க வைக்கும் முடிவு.

வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.